கெளதம் வாசுதேவ் மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களை இயக்கி பிரபலமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டு “மின்னலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன்.

தொடர்ந்து வாரணமாயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க வேட்டையாடு விளையாடு என்னை அறிந்தால் வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
2015 கால கட்டத்திற்கு பிறகு இவரது படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. எனினும் இவர் 2018 காலகட்டத்தில் விக்ரமை வைத்து இவர் எடுத்த துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வெளி வருவதற்கு தயாராக இருக்கிறது. கௌதம் வாசுதேவன் படங்களில் காதல் அதிகமாக இருக்கும். குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாக காதல் காட்சிகள் காதலர்கள் பரிமாறப்படும் அன்பு மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கும். அதைப்பற்றி அவரது தங்கை உத்ரா மேனன் ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார்.

உத்ரா மேனன் கூறியது என்னவென்றால் கௌதம் வாசுதேவ் மேனன் புதிதாக படத்தில் காதலை காட்டவில்லை. எங்கள் வீட்டில் நடந்ததைத்தான் காட்டியிருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்ட பெண் எங்கள் தங்கையின் தோழிதான். அந்த கான்செப்ட் இவரது பல படங்களில் இருக்கும் என்று இதுவரை யாருக்கும் தெரியாத சீக்ரெட்டை ஓபன் ஆக பேசியிருக்கிறார் உத்ராமேனன்.
