BREAKING: சற்றுமுன் திமுகவில் இணைந்தார்… இபிஎஸ்-க்கு பயங்கர அதிர்ச்சி….!

By Nanthini on பங்குனி 30, 2026

Spread the love

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

அவருடன் மேலூர் ஊராட்சி முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் திமுக குடும்பத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அமைச்சர் மூர்த்தி உடனிருந்த இந்த இணைப்பு நிகழ்வு, தென் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளின் இந்தத் திடீர் விலகல் அதிமுக தலைமைக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.