திடீர் திருப்பம்… தவெகவில் அவர் இல்லை… சற்றுமுன் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜுக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக அமைச்சர் கே.ஏ.எஸ் (KAS) விளக்கமளித்துள்ளார். முன்னதாக, பார் நாகராஜ் அமைச்சர் கே.ஏ.எஸ்ஸைச் சந்தித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் (SM) வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, “மாற்றத்திற்கான அரசியல் இதுதானா?” என்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினர் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) நோக்கி கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ள அமைச்சர், தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தினசரி பலதரப்பட்ட மக்கள் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருவதாகவும், சர்ச்சைக்கரிய அந்த நபர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகவோ அல்லது எவ்விதப் பொறுப்பிலோ இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.