“அவர் ஒரு பைத்தியக்காரர்… வயதாகிவிட்டது.. என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை!”… கார்கேவை விளாசித் தள்ளிய ஹிமாந்தா…!!

Spread the love

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது மனைவி ரிங்கி புயான் சர்மா ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சி சுமத்தியுள்ள புகார்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஹிமாந்தா சர்மாவின் மனைவி மூன்று பாஸ்போர்ட்கள் வைத்துள்ளார் என்றும், அவரது சொத்து விவரங்களை முதல்வர் தனது வேட்புமனுவில் மறைத்துள்ளார் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெர்ரா குற்றம் சாட்டியிருந்தார். இது தேர்தலுக்கு முந்தைய அரசியல் சூழலை அனல் பறக்கச் செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த முறைகேடு தொடர்பாக மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை ஏஜென்சிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே பவன் கெர்ராவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உண்மைகளைக் கண்டறிய விசாரணை அவசியமானது என்று தெரிவித்தார். காங்கிரஸின் இந்தத் தொடர் தாக்குதல்கள் அசாம் தேர்தல் களத்தில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

காங்கிரஸின் புகார்களுக்குக் கடும் பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று சாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எனது மனைவி மீதான புகாருக்கு ஆதாரமான ஆவணங்களைக் கேட்க பவன் கெர்ராவை போலீசார் தேடி வருவார்கள். அவர் டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு ஓடிவிட்டார், அவர் பாதாள உலகத்திற்குச் சென்றாலும் போலீசார் விடமாட்டார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சித்த ஹிமாந்தா சர்மா, “கார்கேவுக்கு வயதாகிவிட்டது, அவர் பைத்தியக்காரனைப் போலப் பேசுகிறார்” என்று தனிப்பட்ட ரீதியிலும் சாடினார். இத்தகைய ஆதாரமற்ற புகார்களை முன்வைக்கும் முன் வெளியுறவுத் துறையிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும், பவன் கெர்ராவிடம் உள்ள ஆவணங்களை ராகுல் காந்திதான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணை ராகுல் காந்தி வரை நீளும் என்றும் ஹிமாந்தா சர்மா அதிரடியாகத் தெரிவித்தார்.

Muthu Mani

Recent Posts

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

5 minutes ago

அய்யோ நீயெல்லாம் ஒரு மனுஷனா?…. தெருநாயை கோடாரியால் வெட்டி கொன்ற நபர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…

7 minutes ago

“பயப்படாதீங்க பாபு”…. நேரில் சென்று கையை பிடித்து தைரியம் சொன்ன முதல்வர் விஜய்….. MGM மருத்துவமனையில் நடந்தது என்ன…?

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…

19 minutes ago

ரூ. 70 கோடி டீலிங் தோல்வி?…. ஜெம் வீரமணி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிய விஐபி மகன்…. வெளியான லுக் அவுட் நோட்டீஸ்….. சற்றுமுன் பரபரப்பு….!

10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…

25 minutes ago

தமிழக பாஜகவுக்கு புதிய மாஸ்டர் பிளான்…. டெல்லியில் இருந்து களமிறக்கப்பட்ட முக்கிய புள்ளி….வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு….!

பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…

30 minutes ago

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் நடந்த அதிசயம்… கேஎப்சி பார்க்கிங்கில் பிறந்த குழந்தை… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா…?

பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…

57 minutes ago