அவர் ஒரு மகா கலைஞன்… இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல… தனுஷை புகழ்ந்து தள்ளிய முன்னணி பிரபலங்கள்…

By admin on மாசி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, இயக்குனராக, பாடலாசிரியராக, பின்னணி பாடகராக என பல பன்முகங்களை கொண்டவர் தனுஷ். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர். இவரது சகோதரர் செல்வராகவன் இயக்குனராக இருக்கிறார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது.

   

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். இவரெல்லாம் ஹீரோவா என்று அனைவரும் இவரை விமர்சித்தனர். ஆனால் அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இன்று பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் தனுஷ்.

   

 

கடந்த வருடம் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அடி எடுத்து வைத்திருக்கிறார் தனுஷ். இந்நிலையில் தனுஷ் இரண்டாவதாக இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் பிப்ரவரி 21 இல் ரிலீசாக இருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் முன்னணி பிரபலங்களான அருண் விஜய், எஸ் ஜே சூர்யா, ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் தனுஷை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

முதலில் அருண் விஜய் கூறியது என்னவென்றால், ராயன் படம் பார்த்த உடனேயே தனுஷுடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இட்லி கடை படம் மூலமாக அது நடந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இட்லி கடை பட சூட்டிங்கிலேயே அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதிக் கொண்டிருக்கிறார் தனுஷ். அவரை பார்த்தால் Inspiring ஆக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் ஒரு மகாகலைஞன். அவர் நடிகராக இயக்குனராக பின்னணி பாடவராக பாடலாசிரியராக என பன்முக திறமையை பர்ஃபெக்டாக வெளிக்காட்டுகிறார் என்று கூறினார். அடுத்ததாக எஸ் ஜே சூர்யா NEEK படத்தை பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு. ஜாலியா வாங்க ஜாலியா போங்க என்பது போல் தான் அந்த படம் இருக்கிறது. தனுஷ் நன்றாக உருவாக்கி இருக்கிறார் என அனைவரும் அவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.