நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளராகப் பொறுப்பு வகித்த வழக்கறிஞர் சங்கர், தற்பொழுது அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பல்வேறு முக்கிய வழக்குகளை நீதிமன்றத்தில் முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்தும் முன்னணிப் பொறுப்பாளர்கள் தவெகவிற்குப் படையெடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
