Connect with us

CINEMA

காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் தெரியுமா?.. வைரலாகும் புகைப்படங்கள்…

சினிமாவில் பிரபலமான நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளுகின்றனர்.  அந்த வகையில் ஒரு சிலர் நடிகைகள் மதம் மாறி திருமணம் செய்துள்ளனர். அவர்களைப் பற்றி இதில் காண்போம்.

1.லிஸி:

   

எண்பதுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை லிஸி  இவர்  இயக்குனர் பிரியதர்ஷன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இவர் காதலுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதோடு தன்னுடைய பெயரை லட்சுமி எனவும் மாற்றிக் கொண்டாராம்.  பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

2. நயன்தாரா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை நயன்தாரா. இவர் மலையாள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரபுதேவா மீது கொண்ட காதல் காரணமாக 2011 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் இருந்து  இந்துவுக்கு கன்வெர்ட் ஆனார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த காதலானது  தோல்வியில் முடிந்தது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

3.மோனிகா:

முதலில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி. அதன் பிறகு பகவதி மற்றும் அழகி போன்ற படங்களில் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மோனிகா. இவர்  இந்து குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகனான மாலிக் என்பவரை திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி உள்ளார். அதன் பிறகு இவருடைய பெயரை ரஹிமா என்று மாற்றிக் கொண்டார்.

4.நக்மா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா.நந்திதா மொராஜ் என்பதை இயற்பெயராக கொண்ட இவரது அப்பா ஒரு இந்து மற்றும் அம்மா முஸ்லிம். ஆனால் இவர் ஒரு கிறிஸ்டியன் நடிகரை காதலித்து வந்ததால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார் என பேசப்படுகிறது. ஆனால் நக்மா அதற்கு மறுப்பு தெரிவித்து என்னுடைய நண்பரின் பரிந்துரையால் என் மன ஆறுதலுக்காக இந்த சமயத்தினை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார்.

 

 

5.ஹேமமாலினி :

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை ஹேமா மாலினி. இவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர். நடிகர் தர்மேந்திரா என்பவரை காதலித்து வந்தார். ஏற்கனவே திருமணம் ஆன தர்மேந்திராவை திருமணம் செய்வதற்காக முஸ்லிம் சமயத்திற்கு மாறினார்  அதன் பிறகு  1980ல் திருமணம் செய்து கொண்டனர்.

6. குஷ்பூ:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை குஷ்பூ. இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மாறியதோடு இவரை இன்று வரை அதை கடைபிடித்து வருகிறார்.

7.ஜோதிகா:

சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா இவர் அப்பா ஒரு இந்துமதத்தைச் சேர்ந்தவர், அம்மா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் பிரபல நடிகர் ஆன சூர்யாவை திருமணம் செய்து கொள்ள இந்து மதத்திற்கு மாறி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.

8.ஜோமல் :

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோமல்.  இவர் தமிழில் சிநேகிதியே படத்தில் ஒரு கதை முக்கிய கதாபாத்திரத்தில் வருவார் .அது மட்டும் இல்லாமல் பிரியாத வரம் வேண்டும் எனும் படத்தில் நடிகர் பிரசாந்தை ஒருதலையாக காதலிப்பார். கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர் சந்திரசேகர பிள்ளை என்பவரை காதலித்ததால் இந்து சமயத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

9.ஆயிஷா தாக்கியா:

80 90களில் முன்னணி பாலிவுட் நடிகையான ஆயிஷா தாக்கியா.இவர்  இந்து குடும்பத்திலிருந்து காதலுக்காக இஸ்லாமியத்துக்கு மாறியுள்ளார். இஸ்லாமியரான பரானாஸ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

10.சமந்தா:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா.  நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்க்காக இந்து சமயத்திற்கு  மாறினார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் விவாகரத்து செய்து விட்டாலும் தற்போது வரை சமந்தா இந்து கோயில்களில் வழிபாடு செய்து வருகிறார்.நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்க்காக இந்து சமயத்திற்கு  மாறினார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் விவாகரத்து செய்து விட்டாலும் தற்போது வரை சமந்தா இந்து கோயில்களில் வழிபாடு செய்து வருகிறார்.

Continue Reading

More in CINEMA

To Top