‘சூப்பர் சிங்கர்’ ஷாம் விஷாலின் அழகான குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலின் அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது பல சீசன் கடந்து தற்பொழுது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்பொழுது பிரபலங்களாக வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டுள்ளனர்.

   

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 7ல் இரண்டாவது வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷாம் விஷால். இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இவர் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அனிருத் இசையில் சிட்டி ஸ்டோரி மற்றும் புட்டா ஸ்டோரி பதிப்பில் பாட வாய்ப்பு கிடைத்தது. இப்பதிப்பு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெளியானது. இதில் அவர் வெற்றிகரமாக பாடியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என வெள்ளி திரையில் வெற்றிகரமாக கால் பதித்து பயணித்துக் கொண்டு வருகிறார். பல நிறைய தனிப்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது அதிக அளவு பெண் ரசிகைகள் உள்ளனர்.

இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். சமீபத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து தனது அழகான குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகைகள் அதிகம் வைரல் ஆக்கி வருகின்றனர் .

இதோ அந்த அழகான குடும்ப புகைப்படம்….