தென்னிந்திய சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக இவரது பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.இயக்குனர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இதை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஊர்வசி.

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி சிவப்பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்பொழுது குடும்பம், கேரியர் என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை ஊர்வசிக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரின் சகோதரிகளான கல்பனா மற்றும் கலரஞ்சினி இரண்டு பேரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான். நடிகை ஊர்வசி திருவனந்தபுரம் கேரளாவை சேர்ந்தவர். இவருடைய அப்பா சவர நாயர் அம்மா விஜயலக்ஷி. தற்பொழுது பலரும் பார்த்திடாத நடிகை ஊர்வசி தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

