அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் தொடர்ந்து விலகி, மாற்று கட்சிகளில் இணைந்து வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கட்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் வதந்திகள் பரவின. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் அவரிடம், “நீங்களும் கட்சியை விட்டு விலகப் போகிறீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு வார்த்தைகளால் பதில் ஏதும் கூறாத செல்லூர் ராஜு, சற்றும் யோசிக்காமல் தனது இரண்டு விரல்களை உயர்த்தி, அதிமுகவின் சின்னமான ‘இரட்டை இலை’யைக் காட்டி புன்னகைத்தார். இதன் மூலம், தான் என்றுமே அதிமுகவிலும், இரட்டை இலை சின்னத்தின் பக்கமும் தான் உறுதியாக இருப்பேன் என்பதை சமிஞை மூலமே நிரூபித்து, பரவி வந்த அனைத்து வதந்திகளுக்கும் மிக சாதுரியமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
