தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் உள்ளதை உறுதி செய்தாலும், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தற்போது அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் தொகுதிகளுக்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களைத் தலைமை இறுதி செய்யும் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தமக்கு விருப்பமான தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இதற்கிடையே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் இருந்த அண்ணாமலை, மேலிட உத்தரவின் பேரில் அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரவழைக்கப்பட்டு ஆலோசனையில் பங்கேற்றார். அண்ணாமலையின் செல்வாக்கை தேர்தல் களத்தில் பயன்படுத்த பாஜக மேலிடம் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…