ஆக்ரோஷத்தின் உச்சம்..! “வா சண்டை போடு” நியூசிலாந்து பேட்ஸ்மேனை நேருக்கு நேர் மோத அழைத்த ஹர்திக் பாண்டியா… அதிர்ச்சி வீடியோ வைரல்..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

ராய்ப்பூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களத்தில் ஆவேசமாகச் செயல்பட்ட ஒரு தருணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கினார். அவர் மூன்று கேட்சுகள் பிடித்ததுடன், பந்துவீச்சிலும் பார்ட்னர்ஷிப்பை முறியடித்து முக்கியப் பங்கு வகித்தார்.

நியூசிலாந்து இன்னிங்ஸின் 17வது ஓவரில், தடுமாறிக் கொண்டிருந்த மார்க் சாப்மேனை அவுட் செய்த பிறகு ஹர்திக் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். அப்போது களத்திற்கு வந்த புதிய பேட்ஸ்மேன் சக்கரி ஃபௌல்க்ஸ்-ஐ நோக்கி ஆவேசமாகச் சென்றார். ஃபௌல்க்ஸ் எப்படியோ ஹர்திக்கின் நேருக்கு நேரான மோதலைத் தவிர்த்து விலகிச் சென்றார். இதனால் எரிச்சலடைந்த ஹர்திக் பாண்டியா, அந்த பேட்ஸ்மேன் திசையில் கோபமாகக் கத்தி, “சண்டை போடு”   என்று கூறியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.