குஷியோ குஷி… இன்று முதல் 15 நாட்களுக்கு…. இரவோடு இரவாக CM விஜய் அதிரடி உத்தரவு…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் உள்ள சுமார் 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், மொத்தம் 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இந்தத் தண்ணீர் தடையின்றித் திறந்துவிடப்பட உள்ளது.

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாததால் டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி விவசாயிகள் கடும் கவலையிலும் வேதனையிலும் ஆழ்ந்திருந்த சூழலில், தமிழக அரசின் இந்த அதிரடி மற்றும் சமயோசிதமான அறிவிப்பு ஈரோடு பகுதி விவசாயிகளிடையே பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.