பிரபல நடிகையான ஹன்சிகா கடந்த 2007-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ரிலீசான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹன்சிகா ஹீரோயினாக தமிழ் திரை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்டருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொழிலதிபாரான சொஹைல் என்பவரை கடந்த 2022-ஆம் ஆண்டு ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், 15 மினிட்ஸ், மை நேம் இஸ் சுருதி, கார்டியன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படங்கள் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் ரவுடி பேபி, மேன், காந்தாரா, உள்ளிட்ட படங்களை ஹன்சிகா கைவசம் வைத்துள்ளார். ஆர். கண்ணன் இயக்கத்தில் காந்தாரி திரைப்படத்தில் ஹன்சிகா நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மெட்ரோ கிரிஷ், மயில்சாமி, ஸ்டன்ட் செல்வா, வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேற்று பட குழுவினர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டனர். அதில் முற்றிலுமாக மாறுபட்ட தோற் றத்தில்பழங்குடி பெண்ணாக ஹன்சிகா நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு கருப்பு நிறத்தில் ஹன்சிகா தோற்றம் அளிக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் ஹன்சிகாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.