“ப்ளீஸ் அப்பா, எங்களை விட்ரு வேண்டாம்”… பெற்ற 2 மகள்களை வீட்டுக்குள்ளேயே வைத்து கதற கதற தந்தை செய்த கொடூரம்…… நாட்டையே உலுக்கும் பயங்கரம்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் (45) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இதனிடையே மஞ்சுநாத் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதைக்கு அடிமையான மஞ்சுநாத் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த தன்னுடைய இரண்டு மகள்களையும் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விடாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர். அப்போது தங்கள் தந்தையே தங்களை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் இது குறித்து வெளியே கூறி விடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்திருப்பதாகவும் கூறி கதறி அழுதனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் குழந்தைகளின் தாயிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

   

இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான்,நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டிலிருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைக் கேட்டு கிராம மக்கள் அனைவரும் கொந்தளித்த நிலையில் அனைவரும் ஒன்றாக திரண்டு போலீஸ் நிலையத்திற்கு முன்பு பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பாலியல் பலாத்காரம் செய்த அவனைத் தூக்கில் போட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது