“உடனே சிலிண்டரை ஒப்படைங்க”… இல்லனா கேஸ் கனெக்ஷன் கட்?… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!

By Muthu Mani on பங்குனி 25, 2026

Spread the love

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எல்பிஜி (LPG) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) விநியோகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பிஎன்ஜி இணைப்புக்கு மாறாமல் தொடர்ந்து எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தினால், அவர்களின் எரிவாயு இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி, போர்ச் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்கு மாற்றாக, உள்நாட்டிலேயே கணிசமாக உற்பத்தி செய்யப்படும் மற்றும் பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்படும் பிஎன்ஜி அதிக நம்பகத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. சிலிண்டர்களைப் போலன்றி, இது நேரடியாகக் குழாய்கள் மூலம் வழங்கப்படுவதால் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படாது. எனவே, பிஎன்ஜி வசதி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மூன்று நாட்களுக்குள் அதற்கான அனுமதியைப் பெற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் மாற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

   

புதிய விதிகளின்படி, ஒரு பகுதியில் பிஎன்ஜி கட்டமைப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் பயனாளர்கள் மாற வேண்டும்; தவறினால் விநியோகம் நிறுத்தப்படும். இருப்பினும், தொழில்நுட்பக் காரணங்களால் பிஎன்ஜி இணைப்பு வழங்க முடியாது எனச் சப்ளையர் சான்றிதழ் அளித்தால் மட்டுமே எல்பிஜி சேவை தொடரும். மேலும், பிஎன்ஜி உட்கட்டமைப்பை வேகப்படுத்த, குழாய் பதிக்க விண்ணப்பிக்கும் குடியிருப்பு வளாகங்களுக்கு உரியக் காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.