அந்த ஏழு நாட்கள் மின்சார சம்சாரம் போன்ற படங்கள் மூலமாக மக்களை மாஸ்டராக மகிழ்வித்து தற்போது மிஸ்டராக இருப்பவர்தான் “ஹாஜா செரிப்”. கோலிவுட் சினிமாவில் குட்டி நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வெற்றிகளை குவித்த முன்னணி மாஸ்டர் நடிகராக வலம் வந்தவர் தான் ஹாஜா செரிப். இவர் விஜயகாந்த், பாக்கியராஜ், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகருடன் பல படங்கள் நடித்து பல வெற்றிகளை பார்த்து உள்ளார்,
முக்கியமாக சொல்லப்போனால் பாக்கியராஜ் படமான “அந்த ஏழு நாட்கள்”, “புதிய வரம்புகள்” போன்ற படங்களில் இவரின் தனித்துவமான நகைச்சுவையையும் நடிப்பும் மக்களை சிரிக்க வைத்தது வியக்க வைத்தது என்றே கூறலாம், அப்படி தத்ரூபமாக நடித்திருப்பார். முக்கியமாக இவர் ஹியூமர் மிகவும் பிரமாதமாக இருக்கும், இவரின் அந்த குழந்தைத்தனமான நடிப்பை கண்டு மக்கள் வியந்துள்ளார்கள்,
தமிழ் சினிமாவில் இவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், அந்த ஏழு நாட்கள், மலையூர் மம்பட்டியான், அன்புக்கு நான் அடிமை, பொறந்த வீடு, நெத்தியடி, கன்னி ராசி, புதிய வரம்புகள், சமரசம் ஓகே சடரங்கம், நிழல்கள், உதிரிப்பூக்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், ரங்கா, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். நீண்ட வருடமாக படம் எதுவும் பண்ணாமல் இருந்தார், தற்போது இவர் ஒரு தனியார் youtube சேனலில் இன்டர்வியூ ஒன்று கொடுத்திருக்கிறார்,
அதில் இவரைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் நான் எந்த கவலையும் படவில்லை, நான் இதுவரை நடிக்க எல்லா படங்களும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கு. அதுவே எனக்கு போதுமானது, இதுக்கு அப்புறம் நான் நாடக நடிப்பு கலை நிகழ்ச்சி போன்ற விஷயங்கள் நான் ஈடுபட்டு வருவதால் படங்களில் பெரிதளவு எனக்கு ஆர்வம் இல்லை, ஆனால் தற்போது இரண்டு படங்கள் நடித்து வருகிறேன், இதற்கு அப்புறம் அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு வருகிறது, அடுத்தடுத்து நடிப்பை மீண்டும் தொடர்வேன் என்று சுவாரசியமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.