இந்த விஷயம் தெரியுமா..? விமானம் முழுவதும் வழுக்கை தலையுடன்… துருக்கியை நோக்கி படையெடுக்கும் ஆண்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது துருக்கியில் முடி மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவு மிகவும் குறைவாக இருப்பதால், நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் தலைமுடியை மீண்டும் பெறுவதற்காக வழக்கமான விமானப் பயணங்களில் துருக்கியை நோக்கிப் பயணிக்கின்றனர்.

அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், துருக்கியில் சிகிச்சைக் கட்டணம் 50% முதல் 70% வரை குறைவு. பெரும்பாலான மருத்துவமனைகள் தங்குமிடம், போக்குவரத்து மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஆல்-இன்க்ளூசிவ்’ தொகுப்புகளை வழங்குகின்றன.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆண்கள் துருக்கிக்கு இதற்காகவே பயணம் செய்கின்றனர். குறிப்பாக இஸ்தான்புல் நகரம் “உலகின் முடி மாற்றுத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.