பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்து எச். ராஜாவின் குடும்பத்தினர் எக்ஸ் (X) தளத்தில், “தமிழக முதல்வர் மேதகு மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களும் இன்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வந்து, சிகிச்சை பெற்று வரும் எச். ராஜா ஜி அவர்களின் உடல்நிலை குறித்து மிகவும் அக்கறையுடன் கேட்டறிந்தனர். அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, நேரில் வந்து நலம் விசாரித்து ஆறுதல் கூறிய முதல்வரின் இந்த பண்பான செயலுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்”
எச். ராஜா அவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மனதார வாழ்த்தியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் நேரில் வந்து நலம் விசாரித்த முதல்வர் மற்றும் உடன் வந்திருந்த தலைவர்களுக்கு எச். ராஜா ஜி-யின் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் சார்பில் நன்றியை சமர்ப்பிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
