சென்னை புதுப்பேட்டை அடுத்த நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சேவியர். 21 வயதான இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஜிம் ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை இவர் எழும்பூர் நரியன்காடு போலீஸ் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளார்கள். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று அந்த வாலிபரிடம் விசாரித்ததில் நரியன்காடு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் ஏட்டு ஒருவரின் மகளுக்கும், இவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் அவரை சந்திக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாகவும் தெரியவந்தது.
கல்லூரி மாணவியும் ஜான் சேவியரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய காதலியை பார்ப்பதற்காக சென்றுள்ளார் ஜான் சேவியர். இதை பார்த்த மாணவியின் உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர் தெரிய வரும் எனவும் போலீசார் கூறுகிறார்கள்.
