Categories: சினிமா

விவாகரத்திற்கு பிறகும் சைந்தவியுடன் ஒன்றாக பணியாற்ற இதுதான் காரணம்.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.

சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது.  தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் மற்றும் அமரன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்தை அறிவித்த நிலையில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் விவாகரத்திற்கு பிறகும் பல இசை நிகழ்ச்சிகளில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து பணியாற்றி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜி வி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பதில் அளிக்கும் போது, நாங்கள் தீவிர தொழில் வல்லுனர்கள். எங்களுடைய பரஸ்பர மரியாதை உள்ளது. அந்த மரியாதையின் காரணமாகவே நாங்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுகிறோம் என்று பதில் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago