பயங்கர ஷாக்..! காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்… முக்கிய நிர்வாகி கைது…!!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் போதை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2.80 கிலோ எடையைக் கொண்ட 104 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான ‘பாதயாத்திரை’ நடராஜன் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அரசியல் கட்சி அலுவலகத்திலேயே சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் பதுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.