Connect with us

அட, மஞ்சுமல் பாய்ஸ்-அ விடுங்க.. குணா-வே அந்த ஹாலிவுட் படத்தோட காப்பி தானாம்.. என்னப்பா சொல்றிங்க..?

CINEMA

அட, மஞ்சுமல் பாய்ஸ்-அ விடுங்க.. குணா-வே அந்த ஹாலிவுட் படத்தோட காப்பி தானாம்.. என்னப்பா சொல்றிங்க..?

 

குணா படமே ஒரு காபி தான் இப்படத்தை பார்த்து காப்பியடி அடிச்சு எடுத்த படம் தான் மஞ்சுமேல் பாய்சா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் உள்ள திரையரங்குகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் படி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் அவர்கள் இயக்கத்தில் பரவ பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிபர் பாபு சகீர் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மலையாளத்தில் பெரிதளவு ஓடியது,

தற்போது தமிழில் இது மிக சிறப்பாக ஓடி தற்போது தமிழில் மட்டும் 2 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதே போல் ஓடி பெரிதலாக பெயரை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளிக் குவித்துள்ளது, வெள்ளிக்கிழமை அன்று உலக அளவில் இதை வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இந்திய அளவில் ஒரு மாத காலமாக ஓடி, 50 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளியுள்ளது, தற்போது இது ஓடும் ஓட்டத்தை பார்த்தால் 100 கோடி வரை தொட்டுவிடும் என்று தெரிகிறது, மஞ்சுமா பாய்ஸ் படமும் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக கிட்டத்தட்ட தெரிய வருகிறது.

   

ஆக்சன் மற்றும் திரில்லர் கதையான இப்படம், கொடைக்கானலுக்கு நண்பர்கள் கூடி ட்ரிப் போகும் பொழுது அங்கு நடக்கும் டிராமா காமெடி அனைத்தும் கலந்து ஒரு டிராப்பில் சிக்கிய நபரை காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதைகளாகும். இப்படத்தில் நடித்து இடம்பெற்ற சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, எஸ்.பொதுவால், லால் ஜூனியர், தீபக், பரம்போல் அபிராம், ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோரின் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “குணா” இப்படம் சைக்கோ திரில்லர் அண்ட் சஸ்பெண்ட் என்ற கலவையில் இருக்கும். இப்படத்தை இன்ஸ்பெகராக எடுத்துக் கொண்டு இயக்கிய படம் தான் “மஞ்சுமேல்” பாய்ஸ். குணா படத்துக்கான கிரெடிட்டை கொடுக்கும் விதமாக இப்படத்தில் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” என்ற பாடலை படத்தின் முக்கியமான இடத்தில் இடம்பெற வைத்துள்ளார்.

இப்படத்தை வெற்றியை கண்ட கமல்ஹாசன் கூட தற்போது இப்பட குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படமும் அந்த வீடியோவும் இணையத்தில் பயங்கர வைரலாகி வந்த நிலையில், இதை கண்ட நெட்டிசன்கள் 1989 ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான “டை மி டை! மி டவுன்!” என்ற படத்தின் காபி தான் குணா படம், அந்த குணா படத்தை பார்த்தே இவர்கள் காப்பியடிக்கிறார்களா என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top