மரணக் கயிற்றுக்கும், விஷ ஊசிக்கும் முற்றுப்புள்ளி.? அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு மரண தண்டனை… டிரம்ப் அதிரடி முடிவு..!!

Spread the love

அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக மீண்டும் ‘துப்பாக்கியால் சுடும்’ முறையை (Firing Squad) அமெரிக்க நீதித்துறை கூட்டாட்சி அளவில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த விஷ ஊசி செலுத்தும் முறைக்கு மாற்றாக, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. விஷ ஊசிக்குத் தேவையான மருந்துகளை விநியோகிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மறுப்பு தெரிவிப்பதாலும், ஊசி செலுத்துவதில் ஏற்படும் குளறுபடிகளால் கைதிகள் அதிக சித்திரவதைக்கு உள்ளாவதாலும் இந்த மாற்று வழிமுறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின்படி, மரண தண்டனை கைதி ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு, அவரது இதயத்தைக் குறிவைத்து ஐந்து வீரர்கள் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுடுவார்கள். ஏற்கனவே உட்டா, தென் கரோலினா உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இம்முறை சட்டப்பூர்வமாக உள்ள நிலையில், தற்போது கூட்டாட்சி அளவிலும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், மனித உரிமை அமைப்புகள் அரசின் இந்த முடிவை காட்டுமிராண்டித்தனமானது எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

5 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

6 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

6 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

7 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

7 மணத்தியாலங்கள் ago