“பகலில் சாப்ட்வேர் இன்ஜினியர்.. இரவில் அந்த மாதிரி வேலை”…. குடியாத்தம் லாட்ஜில் போலீஸார் நுழைந்தபோது நடந்த ஷாக் ட்விஸ்ட்…. !

By Nanthini on மாசி 6, 2026

Spread the love

தமிழகம் முழுவதும் சட்டவிரோத பாலியல் தொழிலை ஒடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய வீடுகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி மற்றும் அதன் அருகிலுள்ள சில வீடுகளில் போலீசார் சோதனை செய்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அங்கு தங்கியிருந்தவர்கள் தங்களை ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என்றும், அலுவலக வேலை நிமித்தமாக தங்கியிருப்பதாகவும் கூறி போலீசாரை ஏமாற்ற முயன்றுள்ளனர். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் அங்கு சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

   

இந்த அதிரடி சோதனையின் போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 4 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தம் 16 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைதானவர்கள் மீது குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாகவே ஐடி ஊழியர்கள் என்ற போர்வையில் பொதுமக்களின் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த சட்டவிரோதச் செயலைத் திட்டமிட்டு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

   

இதேபோல் வேலூர் சத்துவாச்சாரி பகுதியிலும் ஒரு வீட்டில் நடந்த சோதனையில் 3 பெண்கள் மீட்கப்பட்டதுடன், புரோக்கர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் வேலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.