மக்களுக்கு டபுள் ட்ரீட்…. தீபாவளிக்கு ஸ்பெஷல் கிஃப்ட் வழங்க தயாராகும் CM விஜய்…. காலையிலேயே குட் நியூஸ்….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை வழங்குவது குறித்து முதலமைச்சர் விஜய் நிதித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனைகள் நடத்தியுள்ளார். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் விலைவாசியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இக்காலகட்டத்தில் நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த மளிகைத் தொகுப்பில் என்னென்ன அத்தியாவசியப் பொருட்களைச் சேர்ப்பது மற்றும் இதற்காக அரசுக்குத் தேவைப்படும் மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்த முக்கிய விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலவச மளிகைப் பொருள் தொகுப்பு வழங்குவதன் மூலம் தீபாவளிப் பண்டிகையைக் பொதுமக்கள் எளிய முறையில் மகிழ்ச்சியோடு கொண்டாட வழிவகை செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அரசுப் பொதுமக்களுக்குப் பொருளாதார ரீதியில் உறுதுணையாக இருக்கவும், பண்டிகைக் காலச் சுமையைக் குறைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.