அண்டார்டிகாவில் வளர்ந்து வரும் பச்சை பாசிகள்… இதனால் பூமிக்கு வரவிருக்கும் ஆபத்து என்ன தெரியுமா…?

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியன் தென்முனையில் அமைந்திருப்பதால் இந்த கண்டத்திற்கு சூரியனின் வெப்பம் மிக குறைவான அளவில் கிடைக்கும். இதனால் இந்த கண்டம் முழுவதும் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது.

   

தற்போது சமீப வருடமாக புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகா பனிகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஆபத்தானது என்று கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சியார்கள் எச்சரித்து வந்தனர். கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பனிக்கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகிறதாகவும் அறிவியலார்கள் கூறுகின்றனர்.

   

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி பனியால் மூடப்பட்டிருந்தாலும் பசுமையான தோற்றத்துடன் பாசிகள் வளர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே விஞ்ஞானிகள் அண்டார்டிக் தீபகற்பத்தில் வளர்ந்து வரும் தாவரங்களை ஆய்வு செய்து வந்தனர்.

 

கடந்த 40 ஆண்டுகளில் பாசிகள் வளர்வது அண்டார்டிகாவில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். 1986 ஆம் ஆண்டில் தாவரங்கள் தீபகற்பத்தில் 0.4 சதுர மையில்களுக்கு குறைவாகவே இருந்தன. ஆனால் தற்போது கிட்டத்தட்ட ஐந்து சதுர மையில்களுக்கு மேலாக இது வளர்ந்திருக்கிறது. இது புவி தீவிரமாக வெப்பமடைந்து வருவதை குறிக்கிறது.

இப்படி தாவரங்கள் தொடர்ந்து வளரும்போது பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டத்தை அதிகப்படுத்தும். இது மனித இனத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் பூமியின் அதிக வெப்பமயமாதல் காரணமாக பல பேரிடர்கள் ஏற்படலாம். இது நமக்கு ஒரு எச்சரிக்கை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.