பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் பகுதியில், பெண் உதவி ஆய்வாளர் (ASI) ஒருவர் தனது சொந்த 5 வயது பேத்தியை மிகக் கொடூரமான முறையில் தண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளுத்தும் வெயிலில், அந்தச் சிறுமியின் கை, கால்களைத் துணியால் கட்டி, வீட்டின் வெளிப்பக்க இரும்பு கேட்டில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளார்.
அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது போர்ச்சுகல் நாட்டில் வசித்து வரும் நிலையில், சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். வெயிலின் கொடுமை தாளாமல் அந்தச் சிறுமி கதறி அழுத சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது இந்த அவலம் தெரியவந்தது. உடனடியாக ஓடிச் சென்ற அண்டை வீட்டார், கேட்டில் கட்டப்பட்டிருந்த சிறுமியை மீட்டுத் தரைக்குக் கொண்டு வந்தனர்.
ये वीडियो पंजाब के फरीदकोट की है।एक महिलाASI ने अपनी 5 साल की पोती के हाथ-पैर कपड़े को बांधकर उसे भीषण गर्मी में घर के बाहर लोहे के गेट से लटका दिया था।पड़ोसी बच्ची के रोने की आवाज सुनकर वहां पहुंचे और उन्होंने ही बच्ची को गेट से मुक्त कराया।बच्ची के मां बाप पुर्तगाल में रहते हैं pic.twitter.com/r3Gs5tsZY4
— pushpa (@mahadev_1611) April 17, 2026
பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையில் இருக்கும் ஒருவரே, ஒரு பச்சிளம் குழந்தையிடம் இவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
