“தாத்தா என்னை விட்ருங்க ப்ளீஸ்”…. பேத்தியை மிரட்டி கதற கதற…. 73 வயது முதியவர் செய்த கொடூரம்…. தமிழகமே அதிர்ச்சி….!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நிகழ்ந்துள்ள இந்த கொடூர சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் 15 வயது மகளும் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது சூழ்நிலையைப் பயன்படுத்தி, சிறுமியின் தாய்வழி தாத்தாவான 73 வயது ராசு என்பவர், வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். உறவுமுறை என்ற நம்பிக்கையில் சிறுமியும் அவரிடம் சகஜமாக பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ராசு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் கொடுமை குறித்து சிறுமி உடனடியாக தனது தாயிடம் தெரிவிக்க, அவர் ராசுவைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இருப்பினும் தனது மிருகத்தனமான புத்தியை மாற்றிக்கொள்ளாத அந்த முதியவர், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மதியம் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து மீண்டும் அவரிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் மற்ற உறவினர்களிடம் முறையிட, அவர்கள் ராசுவை கடுமையாகத் தாக்கி எச்சரித்துள்ளனர். ஆனால், இந்த கொடூரத்தின் வடுக்கள் அந்தப் பிஞ்சின் வாழ்க்கையைச் சீரழிக்கும் என்று அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய தாய், அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அந்த 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முதியவர் ராசு மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தந்தை இல்லாத நிலையில், பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பிய தாத்தாவே பேத்தியைக் சீரழித்த இந்த அவலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மரண பயம்..! “உன் கதை முடிஞ்சது!”… எச்சரித்தும் அடங்காத வாலிபர்… ‘இன்ஸ்டா’ காதல் விவகாரம்… வீட்டின் மீது பறந்த பெட்ரோல் குண்டு…!!

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே…

6 minutes ago

இப்படி இருந்தாத்தான் வாய்ப்பா…? இயக்குனர்களை கிழித்து தொங்கவிட்ட ராதிகா ஆப்தே… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி', கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல…

9 minutes ago

தொடரும் அவலம்..! மனிதநேயமற்ற செயல்… பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளியை வளைத்துப் பிடித்த காவல்துறை…!!

சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

14 minutes ago

ஜிம்மில் மலர்ந்த கள்ளக்காதல்… வீடு மாற நினைத்த கணவன்… வாட்ஸ்அப்பில் தீட்டிய கொலை ஸ்கெட்ச்… ஜிம் டிரைனருடன் மனைவி செய்த பகீர் காரியம்…!!

டெல்லி அருகே உள்ள வசுந்தராவில் வசித்து வந்த ஷஷாங்க் - பிரியா தம்பதியினர் தனியார் நிறுவனங்களில் கணக்காளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.…

20 minutes ago

மனநோயின் வெளிப்பாடா?… காரில் மாணவனுடன் அத்துமீறல்… ஆசிரியையின் அதிர்ச்சி செயல்… சிக்கியதும் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

ஆஸ்திரேலியாவில் இரண்டு பள்ளி மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் ஆசிரியை டெய்லா லீ பிரெய்லிக்கு 15 மாதங்கள்…

28 minutes ago

“பழிவாங்குறதுக்கு முன்னாடி நாங்களே தூக்கிட்டோம்…” தந்தையின் கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி… குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

சென்னையில் கஞ்சா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி ஒருவரைத் தந்தையின் கண்முன்னேயே தடுத்து நிறுத்தி வெட்டிக்கொலை செய்துவிட்டு,…

29 minutes ago