கௌதம் வாசுதேவ் மேனனை என்னையா பண்ணி வச்சிருக்கீங்க இதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் மீம்சாக பறந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எவ்வளவுதான் கடன் இருக்கிறது நாங்கள் வசூலித்து தருகிறோம், அதற்காக அவரை இப்படி செய்யாதீங்க என எல்லா பக்கங்களிலும் கௌதம் வாசுதேவ் மேனன் குறித்த பேச்சு தான். மே 16ஆம் தேதி சந்தானம் நடித்த டிடி தொடர் படங்கள் ஆன டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனும் செல்வராகவனும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மொட்ட ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, மாறன் போன்றவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்தது தான் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.
இவர் யாஷிகா ஆனந்த் உருகி உருகி காதலிப்பதை போல காட்சிகள் ட்ரைலரில் வருகின்றது. அதையும் தாண்டி அவர் அடித்த லூட்டிகள் தான் தற்சமயம் மீம்ஸாக வலம் வருகின்றது. காக்க காக்க படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆடிய எவர்கிரீன் பாடலான உயிரின் உயிரே பாடலை அப்படியே ரீமேக் செய்த கௌதம் வாசுதேவ் மேனனை ஆட வைத்துள்ளனர். இவர் சூர்யா போல கடற்கரையில் ஓடி வருவது தான் ஆச்சரியம் கலந்த காமெடியாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்ததற்கு பின்னால் ஒரு ரகசியம் உள்ளது.
அதாவது இந்த படத்தை தயாரிக்கும் ஷோ பீப்பிள் என்டர்டைன்மென்ட் அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. அதில் சந்தானம் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஒரு காதல் கதையில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்த வரும் சந்தானம் இப்போதுதான் மீண்டும் காமெடி கலந்த கதாபாத்திரம் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்தார்.
ஆனால் மீண்டும் கௌதம் அவரை ஹீரோவாக மாற்றினால் வேதாளம் முருங்கை மரத்தை விட்டு இறங்குமா என்பதுதான் அனைவருடைய கேள்வியாக உள்ளது. அதே சமயம் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நான் அழைத்ததற்காக சந்தானம் அந்த படத்தில் நடித்ததால் பதிலுக்கு நீங்கள் கூப்பிட்டவுடன் நான் வந்தேன் அதற்கு பதிலா நீங்க என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் அழைத்ததால்தான் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நான் நடித்துள்ளேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…