உங்க போனுக்கு இப்படி ஒரு மெயில் வருதா?.. அப்போ உடனே இதை பண்ணுங்க.. அரசு எச்சரிக்கை…!

By Nanthini on ஆடி 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக போலியான sms, போன் கால் மற்றும் இமெயில் மூலமாக பலவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

   

இப்படியான நிலையில் Download e-PAN Card என உங்களுக்கு இமெயில் வந்தால் அதனை நம்ப வேண்டாம் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு நெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.