BREAKING: அரசு பேருந்து கவிழ்ந்தது.. சற்றுமுன் தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…. 15 பயணிகள் நிலை….?

By Nanthini on தை 20, 2026

Spread the love

மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். சாலையில் வாகனங்கள் முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தின் கோரத்தினால் இரண்டு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்தன. விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனங்களை அகற்றி காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்தனர். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த தினம்தான் இதே பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவில் மற்றொரு அரசுப் பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்தனர். அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய விபத்துக்கள் அந்த வழியாகச் செல்லும் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.