ஆளுநரை எதிர்க்க விஜய் அஞ்சுவது ஏன்.? இதுவே திமுகவா இருந்தா சீனே வேற பாஸ்… தெறிக்க விடுவோம் நாங்க… ஆளூர் ஷா நவாஸின் ‘சுளீர்’ கேள்வி..!!

By Soundarya on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்கப் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரிய நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சாய்ந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும், கூட்டணிக் கட்சியான திமுகவிற்கும் துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் விஜய் தரப்புடன் கைகோர்த்துள்ளதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதிப்படுத்தாத வரை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பதில் ஆளுநர் மாளிகை உறுதியாக உள்ளது. தகுந்த எண்ணிக்கையை நிரூபித்துவிட்டுப் பதவி ஏற்குமாறு ஆளுநர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சிக்கலான சூழலில் ஆளுநரை எதிர்த்து ஒரு சிறு கேள்வியைக் கூட எழுப்பாமல் தவெக மவுனம் காப்பது, அந்தக் கட்சிக்கு வாக்களித்த மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களிடையே அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

தவெக அமைதி காத்தாலும், அவர்களுடன் புதிதாகக் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு அதிரடியாகச் சத்தம் போட்ட தவெகவின் ‘விசில்’, தற்போது கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்க்கத் துணிவில்லாமல் பாக்கெட்டிற்குள் முடங்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தவெகவின் இந்தத் தயக்கம் அக்கட்சியின் கொள்கை உறுதிப்பாட்டின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

   

இந்த நிலையில், தவெகவின் அதிகாரப் பகிர்வு வலையில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட விசிக-வில் இருந்து விஜய்க்கு நேரடி நெத்தியடி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விசிக நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் இது குறித்துக் கூறுகையில், இதே 108 இடங்கள் திமுகவிடம் இருந்து ஆளுநர் இவ்வாறு இழுத்தடித்திருந்தால் சட்டமன்றமே அதிரும் வகையில் எதிர்வினைகள் இருந்திருக்கும் என்றார். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதற்குச் சமம் என்றும், அத்தகைய துணிவும் கொள்கை உறுதியும் விஜய்க்கு உள்ளதா என்றும் அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது தவெகவினரைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.