ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகஆசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரயிலை விட்டு இறங்க மறுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் டிக்கெட் பரிசோதகரிடம் அந்த பெண்ணிடம் உங்களுடைய டிக்கெட் எங்கே? காட்டுங்கள். இல்லை என்றால் ரயிலை விட்டு இறங்குகள் என்று கூறுகிறார்.
Imagine being a government school teacher, travelling daily in AC class without a ticket, and when the TTE asks for it, instead of showing one, you accuse him of molestation.
Can’t buy a ₹10 ticket but carry the attitude of the President of India. 🤦🏻♂️ These are the very people… pic.twitter.com/zSWd4o1QXj
— Trains of India 🚆🇮🇳 (@trainwalebhaiya) October 9, 2025
அதற்கு அந்த பெண் பீகாரில் உள்ள அரசு பள்ளியில் தான் ஒரு ஆசிரியை என்பதை உறுதி செய்கிறார். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது மட்டுமல்லாமல் அந்தப் பெண் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் தன்னிடம் அத்து மீறுவதாகவும் கூறியுள்ளார். நிலைமை இறுதியில் ஆர்.பி.எஃப் பணியாளர்களால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், சம்பவம் அங்கு முடிவடையவில்லை. மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானதால், ரயில்வே அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தூண்டினர். இதனை அடுத்து நெட்டிசன்கள் அந்த பெண்ணை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்.
