FLASH :விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி…!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பும் வகையில், முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்க்கு நீண்டகாலமாக ஆஸ்தான ஜோதிடராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வந்த இவருக்கு, தற்போது அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சிப் பணியில் இருந்த ஒருவருக்கு நேரடியாக அரசுப் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வெறும் மூன்றாவது நாளிலேயே இத்தகைய நியமனத்தை விஜய் மேற்கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக அனுபவம் சார்ந்த நியமனங்களுக்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய்யின் இந்த அதிரடி முடிவு, அவரது ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.