BREAKING: கனமழை… அனைத்து மாவட்டங்களுக்கும் சற்றுமுன் அரசு உத்தரவு….!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பருவமழையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தீவிர பாதிப்பு உள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்க்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும், தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜெனரேட்டர்களை பழுது இல்லாமல் பராமரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது