தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்குள்… அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு… மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

அரசு அறிவிக்கக்கூடிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் அரசு ஊழியர்களின் பணியாகும். அதன்படி எந்த திட்டங்கள் அறிவித்தாலும் உரிய முறையில் செயல்படுத்தினால் மக்களால் அரசு பாராட்டப்படுகிறது. அதுவே திட்டங்களை செயல்படுத்தாமல் விட்டால் அரசுக்கு தான் கெட்ட பெயர் வருகின்றது. எனவே அரசு ஊழியர்களின் செயல்பாட்டை பொருத்துதான் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பது என்பது உள்ளது. அதனால் அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அரசு அலுவலகங்களுக்கு வரும் அணுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்த முத்தரவிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக பெறப்படும் குறைகளை மனுக்களின் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் மூலம் குறைகளை கையாளுதல் குறித்த பல்வேறு நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்கும் மாறும் அனைத்து துறை செயலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளை மனுக்களை படிக்கப்பட்ட அரசாணைகள் மற்றும் அரசு கடிதங்களில் கையாளும்போது வகுந்தளிக்கப்பட்ட அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

   

மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை சரியாக பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேட்டில் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். மாற்றி அமைக்கப்பட்ட நடைமுறையின்படி மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன் மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறைகளை களைய வேண்டும் என தலைமைச் செயலாளர் அரசு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.