ராஜஸ்தான் மாநில அரசுக்கு சொந்தமான ராஜ்காம்ப் இன்போ சர்வீஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குனராக பணி புரிந்து வருபவர் பிரத்தியுமான் திக்சித். இவருடைய மனைவி பூனம். இந்நிலையில் ராஜஸ்தான் கோட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் பிரத்தியுமான் அரசின் டெண்டர்களை வழங்குவதற்காக ரெண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஜனவரி 2019ல் இருந்து செப்டம்பர் 2020 வரை பிரத்தியுமான் மனைவி பூனத்திற்கு சொந்தமான ஐந்து வங்கி கணக்குகளில் 37.54 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.
இந்த பணத்தை இரண்டு தனியார் நிறுவனங்கள் செலுத்தியுள்ளது. அதோட சம்பளம் என்ற பெயரில் இந்த பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு நிறுவனங்களிலும் பூனம் வேலை செய்ததாக வருகை பதிவேடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போது பூனம் ஒரு முறை கூட அந்த நிறுவனங்களுக்கு நேரில் சென்றது இல்லை என்பது தெரியவந்துள்ளது எனவும் கணவர் உதவியுடன் இது தயார் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் அரசின் பல்வேறு டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரியான பிரத்தியுமான் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களிலும் மனைவி வேலை செய்வது போலவும் அதற்கு சம்பளமாக பணம் பெறுவது போலவும் சித்தரித்து 37.54 லட்சம் பணத்தில் லஞ்சமாக வாங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…