தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவருடைய அலுவலகத்திலேயே வைத்து மர்ம நபர்களால் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு எந்த பயமும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை தற்போது போலீசார் தேடி வருகிறார்கள். அரசு வழக்கறிஞர் மீதான இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
