8, 10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! தேர்வு கிடையாது… ரூ.20,000 சம்பளத்தில் அரசு வேலை…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க….!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டக் குழந்தைகள் நலம் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக் குழுமத்தில், ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகக் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வேலைவாய்ப்பில் உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும், மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், மாதம் ரூ.13,000 தொகுப்பூதியமும் வழங்கப்படுகிறது. இரண்டு பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 42 என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து வரும் அக்டோபர் 12, 2026 மாலை 5.30 மணிக்குள் ‘மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், திண்டுக்கல்’ என்ற முகவரிக்கு நோிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.