தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 5 இன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இன்று செயல்படாது. அரசின் உத்தரவை மீறி திறந்து விற்பனையில் ஈடுபட்டால் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
