தொடர் பண்டிகை வரும் காரணத்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை முன்கூட்டியே தர இருப்பதாக மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலம் தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் பண்டிகை காரணத்தினால் பொருளாதார சௌகரியத்தை கருதி குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடும் விதமாக திட்டத்தை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அரசு கூறியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றே மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மகாராஷ்டிராவில் பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகை ஒரு வாரத்திற்கு தொடங்கும் பலகாரம், இனிப்புகள் போன்ற சமைத்து சாப்பிடுவார்கள். முன்கூட்டியே சம்பளம் கொடுக்க காரணம் இதுதான்.
கேரளாவில் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடுவார்கள். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்றே அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொடுக்கயுள்ளார்கள். அதேபோல் அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை மட்டுமே முன்கூட்டி தரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
