FLASH NEWS: ஷாக் நியூஸ்…. இனி அரசு இ-சேவை மையங்கள் செயல்படாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 20-ஆம் தேதி அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படாது என்று தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் முறையற்ற வகையில் கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படுவதைக் கண்டித்தும், பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) போன்ற அடிப்படை சமூகப் பாதுகாப்புப் பலன்கள் தங்களுக்குச் சரியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியும் அன்றைய தினம் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு அரசுச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் சேவைகளை வழங்கும் இந்த மையங்கள் முற்றிலும் முடங்க வாய்ப்புள்ளதால், அன்றைய தினத்திற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.