உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் அந்தப் பெண்ணிடம் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதுடன், அந்தப் பெண்ணை ஒருமையில் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அங்கு நடக்கும் முறைகேடுகளைத் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார்.
“तुम लोग नहीं सुधरोगे तो बनाऊंगी वीडियो…”डॉक्टर बोला..जा बना ले वीडियो”..!
यूपी के चित्रकूट में महिला मरीज इलाज कराने गई थी..लेकिन जाहिल टाइप स्टाफ और डाक्टरों ने महिला से अभद्रता शुरू कर दी..!
जब महिला ने मोबाइल से वीडियो बनाना शुरू किया तो स्टाफ झल्ला गया..महिला को धक्का… pic.twitter.com/63L3lj6jLE
— Rahul Saini (@JtrahulSaini) March 9, 2026
பெண் வீடியோ எடுப்பதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், “நீ திருந்தவே மாட்டாயா?” என்று கோபமாகக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், “நீங்கள் திருந்தவில்லை என்றால் நான் வீடியோ எடுப்பேன்” என்று தைரியமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மருத்துவர், “போ… போய் வீடியோ எடுத்துக்கொள்” என்று ஏளனமாகப் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஊழியர்கள், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் அண்மைக் காலமாக இது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் கண்ணியமாக நடப்பதற்குப் பதிலாக ‘குண்டர்’களைப் போல நடந்துகொள்வது கண்டனத்திற்குரியது. அதிகார மிரட்டல், தன்னிச்சையான போக்கு மற்றும் அடாவடித்தனம் இல்லாத அரசுத் துறைகளே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை மோசமாகி வருவதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
