தமிழகத்தில் மீண்டும் பேருந்து விபத்து… நள்ளிரவில் திடீரென பற்றி எறிந்த தீ…. ஹைவேயில் திக் திக்….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்து, சாத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அதன் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை உடனடியாக கவனித்த ஓட்டுநர், சாதுர்யமாகச் செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை விரைவாகக் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும், பேருந்தின் உள்ளே இருந்த சில பயணிகளின் உடமைகள் தீயில் கருகி சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.