“டிகிரி இருந்தா போதும்… மாதம் ரூ1.20 லட்சம் சம்பளத்தில் அரசு வங்கி வேலை…! 779 காலிப்பணியிடங்கள்… இந்தியா அதிரடி அறிவிப்பு… முழு விவரம் உள்ளே…!”

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

பேங்க் ஆஃப் இந்தியா பொது வங்கி அதிகாரி பிரிவின் கீழ், மொத்தம் 779 ‘கிரெடிட் ஆபீசர்’ காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 30, 2026 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வங்கித் துறையில் உயர் அதிகாரி நிலையிலான அரசு வேலையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் ஜூலை 20, 2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், MBA , PGDBM, CA, CFA அல்லது CMA போன்ற கூடுதல் தகுதிகளும், வங்கித் துறையில் தொடர்புடைய பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, பதவிகளுக்கு ஏற்ப 25 முதல் 45 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; ஆன்லைன் தேர்வில் ஆங்கில மொழி மற்றும் தொழில்சார் அறிவு ஆகிய பகுதிகளிலிருந்து 125 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.

   

இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ 1.20 லட்சம் வரை கவர்ச்சிகரமான அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். இதனுடன் அகவிலைப்படி , வீட்டு வாடகைப்படி , மருத்துவப் படிகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகளும் அரசு விதிகளின்படி கிடைக்கும். விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ 850 மற்றும் SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் சிறந்ததொரு எதிர்காலத்தை அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்க உடனே விண்ணப்பிப்பது நல்லது.