Farmers

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தராமல் தமிழக அரசு பிச்சை போடுகிறதா? – விவசாயிகள் சங்க கூட்டத்தில் ஆவேசம்!

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. மாவட்ட தலைவர் பண்டரிநாதன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பங்கேற்று பேசினார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடுமையான இழப்பை சற்றும் ஈடு செய்யாது என்று இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது, நாங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டோம். ஆனால் தமிழக அரசு வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் துயரத்தை கணக்கில் கொள்ளாமல் தேர்தலை முன்னிட்டு அவர்களை ஏமாற்றவும் பிச்சை போடுவது போலவும் அளிக்கும் ஒரு குறைவான தொகையாகவே நாங்கள் கருதுகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளை அவமதிக்கும் செயல் இது என்று கூறியிருக்கிறார்.