தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேலு, சில வருட இடைவெளிக்குப் பிறகு ‘நாய் சேகர்’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ‘மாரீசன்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருகிறார். திரைத்துறையில் வடிவேலு உச்சத்தில் இருந்தாலும், அவர் மீதுப் பல குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. குறிப்பாக, அவர் கோடி கணக்கில் சம்பளம் வாங்குவதால் மூத்த கலைஞர்களை மதிப்பதில்லை என்றும், நகைச்சுவைப் படங்களில் நடிக்க மறுக்கிறார் என்றும் சில இயக்குநர்கள் குறை கூறுகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் வி. சேகர் அளித்த பேட்டி ஒன்றில், வடிவேலு குறித்து நடிகர் கவுண்டமணி கூறிய கருத்துகள் வைரலாகி வருகின்றன. வி. சேகர் அளித்த பேட்டியில், “வடிவேலு காலையில், மாலையில் என அடிக்கடி காலில் விழுவாராம். அப்போது கவுண்டமணி ஒரு நாள், ‘வடிவேலு ஒரு நாள் உன்னைக் கால் வாரி விடப்போறான்’ என்று சொன்னாராம். ‘நாமெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடிக்கிறோம், ஆனால் வடிவேலு நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்’ என்று கவுண்டமணி கிண்டல் செய்வாராம்.
ஒருமுறை, வடிவேலு புதிய கார் வாங்கி வந்து கவுண்டமணியை அழைத்துச் சென்றபோது, கவுண்டமணியின் கார் நிற்கும் இடத்தில் மோதும் விதமாகச் சென்றுள்ளார். இதைப் பார்த்த கவுண்டமணி, ‘என்ன சேகரு, நான் சொன்னது நடந்ததா? பட்டாதான் உனக்குப் புரியும்’ என்று சொன்னாராம். வடிவேலு பெரிய நடிகராகக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய பிறகு, பழைய ஆட்களைக் கண்டுகொள்ளவில்லை. ‘காலம் மாறிப் போச்சு’ திரைப்படத்தில், கவுண்டமணி மற்றும் வடிவேலு இருவரும் வினு சக்ரவர்த்தியின் மகன்களாக நடிப்பதாக இருந்தது,” என்று வி. சேகர் பேசியுள்ளார்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…