ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராமராஜன், சத்யராஜ், சரத்குமார் ஆகியோரில் இருந்து அஜித், விஜய், சிம்பு ஆகிய நடிகர்கள் வரை பல திரைப்படங்களில் பல டாப் நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் கவுண்டமணி.
ஆனால் கமல்ஹாசனுடன் இணைந்து மிகவும் சொற்ப திரைப்படங்களிலேயே கவுண்டமணி நடித்துள்ளார். “16 வயதினிலே”, “ஜப்பானில் கல்யாணராமன்”, “பேர் சொல்லும் பிள்ளை”, “மகராசன்”, “சிங்காரவேலன்”, “இந்தியன்” போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு கவுண்டமணிக்கும் கமல்ஹாசனுக்கு ஒத்துப்போகவில்லை, ஆதலால் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்று பேச்சுக்கள் அடிபட்டன.

கமல்ஹாசன் தான் நடிக்கும் திரைப்படங்களில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொள்வார், ஆதலால் கவுண்டமணியை ஸ்கோர் செய்ய விடமாட்டார் என்பதால்தான் இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்றும் கூறுவார்கள்.
அதே போல் கவுண்டமணி, கமல்ஹாசனை அனைவரின் முன்னிலையிலும் “வா, போ” என்று மரியாதை குறைவாக அழைப்பார் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சபிதா ஜோசஃப் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், கவுண்டமணி கமல்ஹாசனுக்கு “மைலாப்பூர் மேக்கப் மேன்” என்று ஒரு பட்டப்பெயரை வைத்திருந்தாராம். படப்பிடிப்பிற்கு கமல்ஹாசன் வர தாமதமானால் “என்ன இன்னும் மைலாப்பூர் மேக்கப் மேன் வரலையா” என்று கிண்டலடிப்பாராம். இந்த விஷயம் எப்படியோ கமல்ஹாசனின் காதுகளுக்குச் சென்றுவிட்டதாம். ஆதலால்தான் கமல்ஹாசன், கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பதை விரும்பாமல் இருந்தாராம். இதுதான் இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்ட காரணம் என்று சபிதா ஜோசஃப் கூறியுள்ளார்.
