கவுண்டமணி கொடுத்த ஒயின் பேரிச்சம்பழம்.. டான்ஸ் ஆட முடியாமல் சொதப்பிய ஷகீலா.. அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

By vinoth on மார்ச் 27, 2024

Spread the love

1997-ம் ஆண்டு கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் நேசம். அஜித் மகேஷ்வரி இணைந்து நடித்த இந்த படத்தில், மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசையமைக்க பாடல்களையும் பழனிபாரதி எழுதியிருந்தார். அஜித்தின் வெற்றிப் பட வரிசைகளில் ஒன்றாக நேசம் படம் நின்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘’நட்சத்திர பங்களா நிக்காதடி சிங்கிளா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடப்படும் ஒரு ஐட்டம் நம்பர் பாடலாக உள்ளது. இந்த படலில் ஜோதி லட்சுமி, ஜோதி மீனா, ஷகீலா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நடனமாடினர். இந்த பாடல் காட்சி படப்பிடிப்பின்போது நடந்த ருசிகரமான சம்பவம் ஒன்றை நடிகை ஷகீலா பகிர்ந்கொண்டுள்ளார்.

   

அதில் “இந்த பாடல் காட்சி படமாக்கப்படும் போது கவுண்டமணி சார் என்னை அழைத்து பேரிச்சம் பழம் ஒன்றை கொடுத்து என்னையும் ஜோதி மீனாவையும் சாப்பிட சொன்னார். நாங்களும் அதை சாப்பிட்டோம். அப்போது ஷாட் ரெடியானதும் நாங்கள் டான்ஸ் ஆட சென்றோம். அப்போது நாங்கள் மூவரும் சுற்றி வருவது போன்ற காட்சியை படமாக்கினார்கள். அதில் ஜோதி லட்சுமி சரியாக ஆடிவிட நானும் ஜோதி மீனாவும் சொதப்பினோம். இயக்குனர் எங்களை அழைத்து என்ன ஆச்சு எனக் கேட்டார்.

   

ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது, நாங்கள் சரியாக ஆட முடியாததற்குக் காரணம் கவுனடமணி சார் கொடுத்த பேரிச்சம்பழம்தான் காரணமென்று. வொயினில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை எங்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார் என்று. அதனால்தான் எங்களால் அந்த பாடலில் சரியாக ஆடமுடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

 

கவுண்டமணி செந்தில் கூட்டணியில் 90 களின் மத்தியில் ஷகீலா பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர்தான் அவர் மலையாள திரையுலகுக்கு அறிமுகமாகி பி கிரேட் படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.